புது தில்லி: கருப்புப் பணத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 300 சதவீத அபராதமும் விதிக்கும் வகையில் விரிவான சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று சென்ற மாதம் பொது பட்ஜெட் தாக்கல் செய்த பொது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். அதன்படி, கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய மசோதா, வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்குவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கவும், அதை வெளிக் கொண்டு வரவும் உதவும். மேலும் இந்த மசோதா வரித்துறைக்கு அதிக அதிகாரங்களை அளிக்கிறது. இந்த மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
Popular Categories



