பஹ்ராச் (உ.பி.) 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி ப்ரச்சி செவ்வாய்க்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பேசினார். உத்திரப் பிரதேச மாநிலம் பஹ்ராச்சில் நடந்த இந்து மாநாட்டில் பேசிய சாத்வி ப்ராச்சி, மத வேறுபாடுகளைக் கடந்து இத்தகைய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்கள் தேர்தல்களில் வாக்களிக்கத் தடை விதிக்கும் வகையில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று பேசினார் சாத்வி ப்ராச்சி. மேலும் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் உள்ளிட்ட தேசப் பற்று மிகுந்த கோஷங்களை எவர் உச்சரிக்க மறுத்தாலும், தேசியக் கொடியை அவமதித்தாலும், பசு வதையை மேற்கொள்பவர்களும், இந்த நாட்டில் வாழும் உரிமையற்றவர்கள் என்றார் சாத்வி ப்ராச்சி. இவர் முன்னர் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 40 – 50 குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்போது, இந்துக்கள் குறைந்தது 4 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி பெரும் புயலைக் கிளப்பினார் என்பது நினைவுகூரத் தக்கது.
2 குழந்தைக்கு மேல் இருந்தால் வாக்களிக்கத் தடை: சாத்வி ப்ராச்சி கிளப்பினார் புது சர்ச்சை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week