புது தில்லி: மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மோடியின் அரசு தவறிவிட்டதாக மோடியின் இளைய சகோதரர் பிரஹ்லாத் குற்றம்சாட்டியுள்ளார். தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அகில இந்திய நியாயவிலைக் கடைகள் கூட்டமைப்பின் சார்பில் நடந்த தர்ணா போராட்டத்தில், பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரஹ்லாத் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, ”மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. எங்கள் போராட்டம் இங்கே நடத்தப்படுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்வியே காரணம். நான் மேற்கொள்வது எனது சகோதரருக்கு எதிரான போராட்டம் அல்ல. என்னைப் பொறுத்தவரை எனது சகோதரர் மதிப்பு மிக்கவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனாலும், தொழில் ரீதியாக எனது குரலை சகோதரருக்கு முன்பாக எழுப்ப இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். எங்களுடைய பிரச்னைகளை பா.ஜ.க. கண்டு கொள்ளவில்லை என்றால் தில்லி சட்டசபைத் தேர்தலில் நடந்ததுபோல் உத்தரப் பிரதேசம், பீகார் மாநில சட்டசபை தேர்தல்களிலும் நடக்கும். நானும் பா.ஜ.க.வின் உறுப்பினர்தான். ஆனாலும், தேசியக் கட்சிகளின் தவறான கொள்கைகளை எதிர்க்கிறேன்” என்றார்.
மத்திய அரசு மீது மோடியின் சகோதரர் குற்றச்சாட்டு
Popular Categories



