ஹத்ராஸ் (உ.பி.,): உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தான் நண்பருடன் சென்றபோது ஒரு கும்பலால் 10 நிமிடங்களுக்கும் மேல் அடித்து உதைக்கப்படும் வீடியோ வாட்ஸ் அப்பில் உலவியதால் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 5 மணி நேர பயணத் தொலைவில் உள்ள ஹத்ராஸில் கடந்த மார்ச் 8ம் தேதி இளம்பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் நடு சாலையில் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் மோட்டார் சைக்கிளில் சந்தைப் பகுதி வழியாகச் சென்றுள்ளனர். அப்போது இரு பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த இரு சக்கர வாகனத்தை மறித்து, இருவரையும் கீழே தள்ளி, அந்தப் பெண்ணை அடித்து உதைத்துள்ளது. அந்தப் பெண்ணை மோசமான வார்த்தைகளால் திட்டி, உதைத்துள்ளனர். அந்தப் பெண் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும், அவர்கள் அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்லி திட்டி அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ பதிவு செல்பொனில் பதிவாகியுள்ளது. இதனை, அந்தப் பெண்ணை அடித்த நால்வரில் ஒருவரே தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை நண்பர்களிடம் உலவ விட்டுள்ளார். அது வாட்ஸ் அப்பில் வெளியாகி அந்தப் பகுதியில் பலரிடம் பரவியுள்ளது. தான் ஒரு கும்பலால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவத்தை தன் பெற்றோரிடம் கூறாமல் தவிர்த்துள்ளார் அந்தப் பெண். ஆனால், அவரது உறவினர் ஒருவர் இந்த வாட்ஸ் அப் வீடியோவைக் கண்டு அவரது பெற்றோரிடம் கூறியதில் உண்மை வெளிவந்துள்ளது. இதை அடுத்து, இந்த விவகாரம் காவல் நிலையத்துக்குச் சென்றது. போலீஸாரின் விசாரணையில், அந்த கும்பல் அதே ஊரைச் சேர்ந்தது என்றும், அவர்களில் ஒருவன் அந்தப் பெண்ணைக் காதலித்ததும், ஆனால் அந்தப் பெண் வேறு ஒரு ஆண் நண்பருடன் சுற்றியதால் ஆத்திரமடைந்து அடித்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அந்த 4 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தான் அடித்து உதைக்கப்படும் வீடியோ: வாட்ஸ்அப்பில் வந்ததால் இளம்பெண் அதிர்ச்சி
Popular Categories



