போகுற போக்க பாத்தா… ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்துக்கு வந்துருமோ?!

இந்தியா லைஃப் ஸ்டைல் வணிகம்
gold 2
gold 2

போகுற போக்க பாத்தா தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 5 ஆயிரம்னு வந்துடுமோ என்று அச்சப் படுகிறார்கள் நகை வாங்க ஆசை கொண்டுள்ள பெண்மணிகள். காரணம், இந்தக் கொரோனா லாக்டவுன் காலத்திலும் தங்கம் விலை விர் என்று ரெக்கை கட்டிப் பறப்பதுதான்!

இன்றைய நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.38,520 க்கு விற்பனை செய்யப் படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.42 அதிகரித்து ரூ.4,815க்கு விற்பனை செய்யப் படுகிறது. அண்மைக் காலத்தில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் தங்கத்தின் விலை ரூ.8,000 வரை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.2,700 உயர்வு கண்டுள்ளது.

இடத்தை வாங்கிப் போட்டு, அதன் விலை வாங்கியதைக் காட்டிலும் பெருமளவு குறைந்துபோயுள்ள நிலையில், பிளாட்கள் வாங்கிப் போட்டு அதை விற்க முடியாமல் கடனுக்கான தவணைத் தொகைஐ செலுத்திக் கொண்டு வரும் நிலையில், தங்கம் மட்டும் மாதந்தோறும் பெருமளவு உயர்ந்து கொண்டே வருவதால், முதலீட்டு நோக்கில் பலரும் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.