கொலையுண்ட தந்தை.. என்னால் காப்பாற்ற முடிய வில்லையே! இராணுவ வீரர் வேதனை!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
yellai-porb

நாட்டின் எல்லையை பாதுகாத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரரின் வீட்டில் ஏற்பட்ட எல்லைப் பிரச்னையில் அவரது தந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தின் சுகுல்பூர் கிராமத்தில் சூர்யா பிரகாஷ் மிஸ்ரா என்ற ராணுவ வீரரின் தந்தை ராஜேந்திர மிஸ்ரா , பக்கத்து வீட்டு சுவர் சேதம் அடைந்ததால் ஏற்பட்ட சண்டையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

yeelai-prob

இந்த கொலை தொடர்பாக அவரின் பக்கத்து வீட்டுக்காரர்களான அசோக் குமார், வாகிஷ்குமார், சந்திரபன், கவுரவ் மற்றும் சத்யம் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பக்கத்து வீட்டு சுவரில் சேதம் ஏற்பட்டது பற்றி முன்பே போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும், ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ராணுவவீரர் சூர்யபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தனது தந்தையை தாக்கியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.