போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்று… மனைவியை வெள்ளத்தில் பறிகொடுத்த கணவர்!

Published:

woman body found in tungabhadra river - 2026

போலீஸிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தவறு நேர்ந்தது. மனைவியை நிரந்தரமாக இழந்த சோகம்.

ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் முன்பு காரோடு கூட அடித்துச் செல்லப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் சிந்துஜா ரெட்டி இறந்த உடலாக மிதந்தார். அருகில் உள்ள துங்கபத்ரா நதியில் அவருடைய உடல் வெளிவந்தது.

போலீஸ் வாகன சோதனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஒருவர் தன் மனைவியை இழந்த சோகச் சம்பவம் இது.

ஜோகுலாப்பா கத்வால் மாவட்டம் உண்டவல்லி மண்டலம் கலுகொட்ல வாகு என்ற கால்வாயில் இரண்டு நாட்கள் முன்பு மூழ்கி இறந்த சிந்துஜா ரெட்டி கர்னூல் நகரம் அருகில் துங்கபத்ரா நதியில் சவமாக மிதந்தார்.

கத்வால் மாவட்டம் புல்லூரு, கலுகொட்ல மத்தியில் உள்ள கால்வாயில் ஜூலை 25ம் தேதி காரோடு கூட சிந்துஜா அடித்துச் செல்லப்பட்டார். ஹைதராபாதில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வரும் வழியில் இந்த சோக சம்பவம் நேர்ந்தது. இரண்டு நாட்களாக அதிகாரிகள் அவருடைய உடலை அடையாளம் காண தேடி வந்தார்கள்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
woman body found in tungabhadra river1 - 2026

கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் ரெட்டி, சிந்துஜா ரெட்டி க்கு ஓராண்டு முன்பு திருமணம் நடந்தது. அந்த தம்பதிகள் இருவரும் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். சிவசங்கரின் சகோதரி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சகோதரியின் புது வீட்டு கிருகப்பிரவேசத்தில் பங்கு பெறுவதற்கு சிவசங்கர் ரெட்டி தன் மனைவியோடு கூட நண்பன் ஜிலானி பாஷாவும் வெள்ளிக்கிழமை இரவு பெங்களூரில் இருந்து காரில் ஹைதராபாத்துக்கு கிளம்பினார்கள்.

சனிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு இவர்கள் கர்னூல் மாவட்டத்தை அடைந்தார்கள்.

துங்கபத்திரா நதி அருகில் இருக்கும் புல்லூரு செக்போஸ்ட் அருகே போலீசார் சோதனை இருக்கும் என்று நினைத்த சிவசங்கர், அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வாகனத்தை கலுகொட்ல பக்கம் திருப்பினார். அந்த சமயத்தில் கலுகொட்ல கால்வாயில் சகதியான சதுப்பு நிலத்தின் மீது கட்டப்பட்ட பாலத்தின் மேல் (காஸ்வே மீது) மழை நீர் மிக அதிக அளவில் ஓடியது. வெள்ளத்தின் தீவிரத்தை கவனிக்காமல் காரை அப்படியே முன்னோக்கி நடத்தினார்கள்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

காஜ்வே யைத் தாண்டும்போது கார் தண்ணீரில் நின்று விட்டது. அதிதீவிரமான வெள்ளத்தின் பிரவாகத்தில் நின்றுபோன காரிலிருந்து சிவசங்கர் ரெட்டி, ஜிலானி பாஷா கீழே இறங்கினார்கள். சிந்துஜாவை வெளியே இழுக்க முயற்சிக்கையில் காரோடு கூட அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். செய்தி அறிந்த போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

சனிக்கிழமை காரை வெளியில் எடுத்தார்கள். திங்கள்கிழமை மதியம் சிந்துஜா உடலை வெளியில் எடுத்தார்கள். கலுகொட்ல வில் இருந்து சுமார் 600 மீட்டர் தூரத்தில் துங்கபத்ரா உள்ளது. கால்வாயில் விழுந்த சிந்துஜா வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு இறுதியில் நதியில் உடலாக மிதந்தார்.

தற்போது துங்கபத்ரா நதிக்கு மிக அதிக அளவில் மழைநீர் வரும் பின்னணியில் சிந்துஜாவுடைய அடையாளம் கிடைப்பதே கஷ்டம் என்று நினைத்தார்கள். கண் எதிரிலேயே தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தன் மனைவி இறந்த உடலாக மிதந்ததால் சிவசங்கர் ரெட்டி துயரத்தில் ஆழ்ந்தார். கண்ணீர்விட்டு கதறினார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img