
மும்பை:
மும்பையில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந் நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பெய்து வந்த மழை நகரின் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழந்தது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மும்பையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. ஒடிசாவின் வடக்கு மற்றும் அதையொட்டிய பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக மும்பையில் மழை பெய்து வருகிறது. அடுத்த 48 முதல் 72 மணி நேரத்துக்கு இது தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது, மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மும்பை புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப் பட்டது. மேலும், வெளியூர் செல்லும் ரயில் சேவையும் ரத்தானது. முக்கிய வழித்தடமான பரேல் மற்றும் குர்லா புறநகர் ரயில் சேவை ரத்து, துறைமுக மார்கம் ஆகியவை பெரும் பாதிப்புக்கு உள்ளானது. மேற்கு ரயில்வே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மும்பையில் பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாலும் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
கடந்த 2006, 2005 மற்றும் தொடர்ந்து இதே போல் மழை நீர் கொட்டித் தீர்த்து, மும்பையில் பெரும் பாதிப்புகள்



