பத்ராசலம் ராமர் கோயில் படிகளைக் கடந்து… கோதாவரியில் வெள்ளம்!

இந்தியா சற்றுமுன்
gothavari1
  • உக்கிரமாக பெருக்கெடுத்து ஓடும் கோதாவரி நதி.
  • பத்ராசலம் ராமர் கோவில் படிக்கட்டுகளைத் தாண்டிய வெள்ளம்.

இரண்டு மூன்று நாட்களாகப் பெய்து வரும் பெரு மழையால் கோதாவரி நதி உக்கிரமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நதியில் நீர் மட்டம் வேகமாக பெருகி வருகிறது. தற்போது நீர்மட்டம் 48.7 அடிகளை எட்டியுள்ளது. அதிகாரிகள் இரண்டாவது அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

பெருமழையால் பத்ராசலம் ஸ்ரீராமர் ஆலய அன்னதான சத்திரத்திற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. ராமாலயம் படிக்கட்டுகள் வரை வெள்ளநீர் பரவியுள்ளது. ஆலயத்தைச் சேர்ந்த கல்யாண கட்டம், குளியல் துறைகள் நீரில் மூழ்கிவிட்டன.

உக்கிர வடிவெடுத்து பெருக்கெடுக்கும் கோதாவரியால் தும்முகூடெம் மண்டலம் லஷ்மிபூர் அருகில் சாலை மீது நீர் பெருகி ஓடுகிறது. நீர் பெருக்கால் தும்முகூடத்திற்கு போக்குவரத்து நின்றுவிட்டது. பத்ராசலத்திலிருந்து வெங்கடாபுரம், செர்ல மண்டலங்களுக்கு போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் மக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

gothavari2

கோதாவரியில் பெருகி வரும் வெள்ள அபாயத்தால் தவளேஸ்வரம் பேரேஜ் மீது இரண்டாவது அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் பெரும் அளவில் மழை பெய்து வருவதால் கோதாவரி நதி பொங்கிப் புரளுகிறது.

பெருகி வரும் வெள்ளத்தால், அபாகரமான சூழல் ஏற்படுவதை தடுக்க, வெள்ள நீர் கடலுக்குள் செல்ல வழி செய்து விடுகிறார்கள். ஞாயிறு மதியம் 12 மணி வரை தவளேஸ்வரம் அணைக்கட்டில் 14.90 அடி நீர்மட்டம் பதிவாகி உள்ளது. அதனால் அதிகப்படியான நீரை அவ்வப்போது வெளியேற்றி வருகிறார்கள்.

அதேபோல் மேல் மட்டத்தில் இருக்கும் கோதாவரி உப நதிகளில் இருந்து நீர் பெருக்கு அதிகரித்து வருவதால் கோதாவரி நீர்ப் பிரவாகம் இன்னும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.