Home ஆன்மிகம் ஒழுக்கம் தரும் பலன்: ஆச்சார்யாள் அருளமுதம்!

ஒழுக்கம் தரும் பலன்: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையிடமே பாண்டவர்களுடனும் கௌரவர்களிடனும் பாடம் கற்று வந்தான்.

துரோணர் தமது எல்லா சிஷ்யர்களுக்கும் ஒரு குடத்தைக் கொடுத்தார். தினமும் நதிக்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு வரவேண்டும்.

அஸ்வத்தாமனுக்கு கொடுக்கப்பட்ட குடத்தின் வாய் மட்டும் பெரியதாக இருந்தது. இதன் காரணமாக அஸ்வத்தாமன் சீக்கிரம் நீரை எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவான். அஸ்வத்தாமனின் வருகைக்கும் மற்றவர்களின் வருகைக்கும் இடையே இருந்த நேரத்தில் துரோணர் தம் மகனுக்கு மட்டும் கூடுதலாக சில பாடங்களை சொல்லிக் கொடுத்தார். இதை அர்ஜுனன் கவனித்து விட்டான் அதன் பிறகு அர்ஜுனன் வருணாஸ்திரத்தைப் பிரயோகித்து தனது குடத்தையும் வேகமாக நிரப்பச் செய்தான். ஆகையால் அவனால் அஸ்வத்தாமன் திரும்பும் அதே நேரத்திற்குள் திரும்ப முடிந்தது. எனவே கௌரவர்கள் தன்னுடைய மற்ற சகோதரர்கள் போல் ஊற்றி துரோணரின் விசேஷ பாடங்களை அர்ஜுனன் இழக்கவில்லை.

மாணவனாய் இருக்கையில் அர்ஜுனனுடைய பிரம்மச்சரியம் குற்றமற்று இருந்தது. அவன் தன் புலன்களை தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தான். அஸ்வத்தாமனின் பிரம்மச்சரியமும், இந்திரிய கட்டுப்பாடும் அர்ஜுனனுடையதோடு ஒப்பிட முடியாத படி இருந்தன. இந்த ஒரு வித்தியாசமானது அவர்கள் இருவரும் ஒரே விதமான பாடத்தை துரோணரிடம் கற்றிருந்தாலும் தெய்வீக அஸ்திரங்களை கையாள்வதில் அவர்கள் பெற்ற நிபுணத்துவத்தில் பெரிய விளைவை ஏற்படுத்தியது.

மகாபாரதப் போரில் அஸ்வத்தாமன் கௌரவர்களின் பக்கம் போர் செய்தான். பீமனால் துரியோதனன் தோற்கடிக்கப்பட்டதும் பாண்டவர்கள் வெற்றி வாகை சூடினார்கள்.

அஸ்வத்தாமன் துரியோதனனை சந்தோஷப்படுத்தவும் மற்றும் தன் தந்தையைக் கொன்ற பாண்டவர்களை வஞ்சம் தீர்த்துக் கொள்ளவும் இரவோடு இரவாக தூங்கிக்கொண்டிருந்த பாண்டவர்களுடைய எண்ணற்ற வீரர்களை கொன்று குவித்தான்.

தன்னுடைய வஞ்சகத் திட்டத்தில் வெற்றி கண்டவன் திரௌபதியின் எல்லா புத்திரர்களையும் மற்றும் அவளுடைய சகோதரர்களான திருஷ்டத்யும்னன் சிகண்டி ஆகியவர்களையும் கொன்றான். அன்றிரவு பாண்டவர்களும் திரௌபதியும் போர்க்களத்திலிருந்து தள்ளியிருந்த ஒரு கூடாரத்தில் கிருஷ்ணரோடு தங்கி இருந்ததால் அவர்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்.

போர்க்களத்திலிருந்து எப்படியோ சமாளித்துக்கொண்டு தப்பியோடி வந்த திருஷ்டத்யுமன் சாரதி மூலமாக கிருபாச்சாரியார் மற்றும் கிருதவர்மனின் துணையோடு அஸ்வத்தாமன் விளைவித்த பெரும் சேதத்தை பாண்டவர்கள் பின்னர் தெரிந்து கொண்டார்கள்.

துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தத்திற்கு உள்ளானது திரௌபதியே. பெரும் கோபத்திலும் துக்கத்தில் மூழ்கி இருந்த அவள் அஸ்வத்தாமனை கொன்று அவன் தலையில் இருக்கும் விசேஷமான நவரத்தினத்தை எடுத்து கொண்டு வந்து தனக்கு தரவேண்டுமென்று பாண்டவர்களை நிர்ப்பந்தித்தாள். உடனே பீமன் அஸ்வத்தாமனின் தேர் சுவடுகளை பின்பற்றி கொண்டு அஸ்வத்தாமனை கண்டுபிடிக்க சென்றான்.

மொத்த உலகத்தையே அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த பிரஹ்மசிர ஆயுதத்தை அஸ்வத்தாமன் துரோணரிடம் இருந்து பெற்றிருந்ததால் பீமனுக்கு அதனால் பெரும் ஆபத்து ஏற்படலாம் என்று கிருஷ்ணர் யுதிஷ்டர்ரிடம் தெரிவித்தார்.

அஸ்வத்தாமனின் சுபாவத்தை துரோணர் நன்கு அறிந்தவர் என்பதால் எப்பேர்ப்பட்ட பெரிய ஆபத்திலும் மனிதர்களுக்கு எதிராக அவ்வாயுதத்தை உபயோகிக்க வேண்டாம் என்று ஏற்கனவே அவர் அஸ்வத்தாமனை எச்சரித்திருந்தார்.

கிருஷ்ணர் தமது தேரில் ஏறிப் புறப்பட்டார் பாண்டவர்களும் அவரை பின் தொடர்ந்து சென்றார்கள். வெகு விரைவிலேயே அவர்கள் பீமனை பிடித்து விட்டார்கள். அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. கோபத்தால் கொதித்துக் கொண்டிருந்த பீமன் கடைசியில் கங்கை கரை யோரத்தில் வியாசருடனும் மற்ற ரிஷிகளுடனும் அமர்ந்திருந்த அஸ்வத்தாமனை சந்தித்தான்.

புழுதி படர்ந்த தேகத்தோடும் குசபுல்லில் நெய்த ஓர் ஆடையை மட்டும் அணிந்தவனாய் காணப்பட்ட அசுவதாமன் பாண்டவர்களை கண்டதும் எரிச்சல் அடைந்தான்.

அவன் உடனே ஒரு புல்லில் பிரஹ்மசிர அஸ்திரத்தை செலுத்தி பாண்டவர்களை அழிப்பதற்காக அவர்கள் மீது அதை ஏவினான். அஸ்வத்தாமனின் அஸ்த்திரத்தை செயலிழக்க செய்வதற்காக கிருஷ்ணர் அர்ஜுனனையும் அதே பிரஹ்மசிர அஸ்திரத்தை பிரயோகிக்க சொன்னார். கிருஷ்ணர் சொன்னவாறே அர்ஜுனன் செய்தான். இரண்டு அஸ்த்திரங்களில் இருந்தும் வெளிப்பட்ட அக்னிப் பிழம்புகள் பூமியை சுட்டெறித்தன. என் நிலைமை அப்படியே நீடித்தால் பூமியில் பயிர்களை எல்லாம் நாசம் அடைந்து வெகு காலத்திற்கு பஞ்சமும் பட்டினியும் தலை விரித்தாடும் என உணர்ந்த வியாசரும் நாரதரும் அத்தகையதொரு நிலை வராமல் தடுப்பதற்காக இரு அஸ்திரங்களுக்கு இடையில் போய் நின்றார்கள்‌ மேலும் தாங்கள் ஏவிய தெய்வீக அஸ்திரங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அர்ஜுனனையும் அஸ்வத்தாமனையும் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அர்ஜுனனை போன்று இல்லாது அஸ்வத்தாமனால் அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ள இயலவில்லை.

இதனால் கோபமடைந்த வியாசர் அஸ்வத்தாமனை கடுமையாக ஏசினார் குறைந்தபட்சம் அதனுடைய உத்தேசித்த இலக்கான பாண்டவர்களிடம் இருந்து அதனை திசை திருப்பியது விடுமாறு அவர் அஸ்வத்தாமனிடம் கட்டளையிட்டார் உன் தலையில் இருக்கும் அந்த ரத்தினத்தை பாண்டவர்களுக்கு கொடுத்துவிடு அவர்கள் உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுவார்கள் என்று வியாசர் கூறினார். அஸ்வத்தாமன் தன்னுடைய அஸ்திரத்தை அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசுவின் மேல் திருப்பினான். பிறகு ஆபத்துக்களையும் வியாதிகளையும் மற்றும் பசியையும் வராமல் தடுத்து காக்க வல்ல தன்னுடைய அரிய ரத்னத்தை எடுத்து பாண்டவர்களிடம் கொடுத்தான் அஸ்வத்தாமன்.

உத்திரைக்கு குழந்தை இறந்து பிறந்தாலும் தாம் அதை உயிர்ப்பித்து தந்து அஸ்வத்தாமனின் கொடிய எண்ணம் நிறைவேறாது செய்துவிடுவதாக கிருஷ்ணர் அறிவித்தார். அஸ்வத்தாமனை பலவாறு தூற்றிய கிருஷ்ணர் பேசி கொள்வதற்கும் துணைக்கும் கூட ஒருவரும் என்று வெகுகாலம் நீ பூமியில் தனியாக சுற்றித்திரிய போகிறாய். மேலும் பல வியாதிகளினால் நீ பீடிக்கப்பட்டு இரத்தமும் சீழும் உன்னிடமிருந்து இடைவிடாது வழிந்து கொண்டே இருக்கும் என்று கூறி அவனை சபித்தார். இவ்வாறு அஸ்வத்தாமனை கொல்லாமல் சபித்துவிட்டு கிருஷ்ணர் பாண்டவர்களிடம் திரும்பி வந்து திரௌபதியை சமாதானப்படுத்தினார். அதன் பின் தம் வாக்களித்தவாறு இறந்து பிறந்த அர்ஜுனனுடைய பேரக் குழந்தையை கிருஷ்ணர் உயிர்ப்பித்தார். அத்தருணத்தில் கிருஷ்ணர் விளையாட்டிற்காக கூட நான் ஒரு பொழுதும் பொய் சொன்னதில்லை போர்க்களத்திலிருந்து ஒருபோதும் நான் புறமுதுகு காட்டி தப்பி ஓடிய தில்லை அத்தகைய நற்செயல்களின் புண்ணிய விசேஷத்தால் இக்குழந்தை உயிர்த்தெழட்டும் எனக்கூறி பிரதிக்ஞை செய்தது மிக சுவாரசியமானது. கிருஷ்ணரின் பிரதிக்ஞைப்படியே குழந்தை உயிர்த்தெழுந்தது.

பிரஹ்மசிர அஸ்த்திரத்தை அர்ஜுனனால் திரும்பப்பெற முடிந்தபோது அஸ்வத்தாமனால் ஏன் செய்ய முடியவில்லை? இக்கேள்விக்கான பதில் மகாபாரதத்திலேயே கூறப்பட்டுள்ளது. அர்ஜுனன் மாணவனாய் இருக்கையில் கடைபிடித்த மாசற்ற பிரம்மச்சரியமும் புலனடக்கமும் தான் அவனுக்கு அத்தகையதொரு ஆற்றலை அளித்தன என்றும் அஸ்வத்தாமன் அங்கனம் நடந்து கொள்ளாததால் அவனால் அஸ்திரங்களை திரும்பப் பெற இயலாமல் போயிற்று என்றும் சொல்லப்பட்டுள்ளது.

குரு தமது எல்லா சிஷ்யர்களுக்கும் சமமாகவே அறிவைப் புகட்டினாலும் தன்னடக்கமும் புலனடக்கமும் அதிகமாகக் கொண்டுள்ள மாணவன் மற்றவர்களைக் காட்டிலும் மிகுந்த பலனைப் பெறுகிறான் என்பதை இக்கதை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »