கோயிலில் மது மாமிசம் உண்ட அறநிலையத் துறை பணியாளர்கள் இடைநீக்கம்!

Published:

temple-non-veg-video
temple-non-veg-video

கடலூர்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் வளாகத்தில் மது அருந்திய விவகாரத்தில், கோவில் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இருவரிடமும் விசாரணை நடத்த வனத்துறையும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.

முன்னதாக, விருத்தாசலம் கோவில் நந்தவனத்தில், ஊழியர்கள் மது அருந்தி, மாமிசம் உண்ணும் வீடியோ வெளியாகி பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கொளஞ்சியப்பர் சுவாமி கோவில் மிகவும் பிரபலமானது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பக்தர்கள் தரிசனமில்லை. வழக்கமான பூஜைகள், துப்புரவு பணிகளை மேற்கொள்ள, அறநிலைய துறை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி!

இந்த நிலையில், கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அங்குள்ள நந்தவனத்தில் அமர்ந்து மது அருந்தியபடி மாமிசம் சாப்பிடுகின்றனர். ஓர் ஊழியர் மற்றவர்களிடம் மான்கறி சாப்பிடுங்கள் என்று கூறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான காட்சிகளை அறநிலைய துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கும் அனுப்பியுள்ளனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

ஊரடங்கால் கோவிலுக்குள் செல்ல முடியாமல், பக்தர்கள் தவித்து வரும் நிலையில், கோவில் ஊழியர்களின் செயலை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

இவர்கள் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து தண்டிக்க வேண்டும். அந்த கோயிலில் பல மான்கள், மயில்கள், சேவல்…

Posted by Pasuthai Ganesan on Sunday, August 16, 2020

Related articles

Recent articles

spot_img