மும்பை:
பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், செப். 6 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் பேட்டி அளித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ்.சை தொடர்புபடுத்தி பேசினார். இதை அடுத்து, அவர் மீது ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான திரித்துமன் ஜோஷி என்ற வழக்கறிஞர், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இருவரும் எந்த ஆதாரமும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசியதாக ஜோஷி தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு, அக்டோபர் 22 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.



