திருப்பதியில் கொரோனா நோயால் மரணித்தவர்களின் தங்க நகைகள் திருட்டு. சிசி டிவியில் பதிவான கட்சிகள். இருவர் கைது
மருத்துவமனையில் இறந்த உடல்களில் இருந்து தங்க ஆபரணங்களை திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துக் கொள்வோம் என்று திருப்பதி எஸ் பி ரமேஷ் ரெட்டி எச்சரித்தார்.
திருப்பதியில் நடத்திய மீடியா கூட்டத்தில் அவர் பேசுகையில்… இந்த மாதம் 23ம் தேதி திருப்பதி ஸ்விம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சடலங்களில் இருந்த ஆபரணங்கள் காணாமல் போன வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ததாக தெரிவித்தார்.
மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு வார்டு பாயும் நர்சும் கைதானதாக கூறினார்.
கொரோனா தொற்று நோயோடு போராடி மரணித்தவரிடமிருந்து குற்றவாளிகள் தங்க ஆபரணங்களை திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததாக கூறினார். குற்றவாளிகளிடம் இருந்து நான்கு தங்க மோதிரங்கள், 6000 ரூ பணத்தையும் கைப்பற்றியதாக என்று எஸ்பி தெரிவித்தார்.
குறைந்த அளவு மனிதாபிமானம் கூட இல்லாமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை மன்னிப்பதற்கில்லை என்று அவர் தெளிவு படுத்தினார்.