
திஷா பாலியல் கொலை சம்பவம் குறித்த ராம்கோபால் வர்மா திரைப்படத்தை நிறுத்தங்கள். ஹை கோர்ட்டை நாடிய திஷாவின் தந்தை.
திஷா பாலியல் வன்முறை கொலை சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா தயாரித்த சினிமாவை நிறுத்த வேண்டுமென்று மத்திய அரசுக்கும் சென்சார் போர்டுக்கும் ஆணையிட வேண்டும் என்று திஷாவின் தந்தை தெலங்காணா ஹைகோர்ட்டை நாடியுள்ளார்.

இது குறித்து அவர் தாக்கல் செய்த பெடிஷனை நீதிபதி ஜஸ்டிஸ் பி நவீன் வெள்ளிக் கிழமையன்று விசாரணை நடத்தினார்.
திஷா என்று பெயரிடப்பட்ட பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் மீது பாலியல் வன்முறை தாக்குதலும் நெருப்பு பற்று வைத்து கொலை நடந்ததும் அவர் மீது நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை என்கவுண்டர் செய்த சம்பவம் குறித்தும் சுப்ரீம் கோர்ட்டு இன்னும் பிரத்யேக கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வரும் பின்னணியில் திரைப்பட தயாரிப்பு நிகழ்த்துவது சரியல்ல என்று திஷாவின் தந்தையின் தரப்பில் வழக்கறிஞர் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் இந்த திரைப்பட தயாரிப்பு மீது மறுப்பு தெரிவித்து எப்படிப்பட்ட விண்ணப்பமும் அளிக்கப்படவில்லை என்று மத்திய அரசின் தரப்பில் அசிஸ்டன்ட் சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஸ்வரராவ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இது குறித்து மத்திய சென்சார்போர்டு திஷாவின் தந்தை அளித்த விண்ணப்பம் மீது விரைவில் நிர்ணயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.
இதுகுறித்து ராம்கோபால் வர்மாவின் அலுவலகம் முன்பு திஷாவின் தந்தை ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளார். அவருக்கு துணையாக மகிளா சங்கங்கள் அங்கு வந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றன.
திஷாவை குறித்த திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால் முதலில் திஷாவின் குடும்பத்தினரை நாடி அனுமதி கேட்க வேண்டுமே தவிர குற்றவாளிகளில் ஒருவனான சென்னகேசவலுவின் கர்ப்பிணியாக இருந்த மனைவியை தன் அலுவலகத்துக்கு அழைத்து அவரை பேட்டி கண்டு திரைப்படம் எடுப்பது சரியானதா? என்று மகிளா சங்கங்கள் மீடியாவிடம் வாதித்தனர்.

மகளை அநியாயமாக இழந்து வருத்தத்தில் உள்ள தம்மை சினிமா எடுத்து இன்னும் வருத்தத்துக்கு ஆளாக்குவதாகவும் அதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
எதார்த்த சம்பவங்களை சினிமாவாக எடுத்து விவாதத்தில் எப்போதும் நின்று வருவது வர்மாவின் வழக்கம். இதுவரை பல சினிமாக்களை இதுபோல் அவர் தயாரித்துள்ள சங்கதி தெரிந்ததே.

2019 நவம்பரில் தெலங்காணா மாநிலத்தில் நடந்த திஷா சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் தெரிந்ததே. திஷா மீது பாலியல் வன்முறை கொலை அதன்பின் குற்றவாளிகள் என்கவுன்டர் இதனை ஆதாரமாகக் கொண்டு ‘திஷா என்கவுன்டர்’ சினிமாவை வர்மா திரைப்படமாக எடுத்துள்ளார். இதுகுறித்து தொடர்பான லுக் மற்றும் டீஸர் வெளியீட்டார்.
இதை பார்த்ததும் அவருடைய தந்தையும் மகளிர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திஷாவின் குடும்பத்தினரைக் கலந்தாலோசிக்காமல் குற்றவாளிகளில் ஒருவனின் கர்ப்பிணியான மனைவியை அலுவலகத்துக்கு அழைத்து அந்தப் பெண்ணை பேட்டி கண்டு சினிமா எடுப்பதாவது என்ற பெண் சங்கங்கள் முறையிடுகின்றனர்.