ஓக்ஹி புயலால் லட்சத்தீவில் வீசிய கடும் சூறாவளி காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொலை தொடர்புகள் செயலிழந்தன.
கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த ஓக்ஹி புயல், அங்கிருந்து நகர்ந்து லட்சத்தீவுகளை கடுமையாக தாக்கியது. தொடர்ந்து, புயல் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஓக்ஹி புயல் காரணமாக, லட்சத்தீவில் பலத்த மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மினிகாய் தீவில் 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அங்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
இந்தப்ன்பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் கடல் நீர் உள்ளே புகாத வண்ணம் கட்டப்பட்ட தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளன. தொலை தொடர்பு சாதனங்களும் சேதமடைந்துள்ளன.
புயல் காரணமாக மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சூறாவளிக் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.



