
அஞ்சலி:- பிரபல பத்திரிக்கையாளர் துர்லபாடி குடும்பராவு காலமானார். இவர் கின்னஸ் புக் வேர்ல்டு ரெக்கார்ட் சாதித்தவர்...
பிரபல பத்திரிக்கையாளர் பத்மஸ்ரீ துர்லபாடி குடும்பராவு காலமானார். ஞாயிறன்று இரவு 10மணிக்கு உடல்நலம் சரியின்றி விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெறும் போது நள்ளிரவு தாண்டிய பின்பு மரணமடைந்தார். அவர் பிரிவு குறித்து பல பிரமுகர்களும் பத்திரிக்கையாளர்களும் அஞ்சலி தெரிவித்தார்கள்.
குடும்பராவுக்கு பத்திரிகைத் துறையில் மிக நீண்ட அனுபவம் உள்ளது. சுமார் 70 ஆண்டு காலம் பத்திரிக்கை துறையில் ஆராய்ச்சி செய்துள்ளார். ஜேர்னலிஸ்டாகவும் எழுத்தாளராகவும் வர்ணனையாளராகவும் துர்லபாடி ஆல்-ரவுண்டராக பெயர் பெற்றவர்.
குடும்பராவு 1933 ஆகஸ்ட் 10ஆம் தேதி விஜயவாடாவில் பிறந்தார். 1946இல் ஜர்னலிஸம் துறையில் அடியெடுத்து வைத்தார். அதன்பின் ஆந்திர மாநிலத்தின் முதல் முதலமைச்சரான டங்குடூரி பிரகாசம் பந்துலுவின் காரியதரிசியாக பணிபுரிந்தார். டங்குடூரி பிரகாசம் பந்துலுவிலிருந்து சந்திரபாபு வரை 18 முதலமைச்சர்களுடன் துர்லபாடி பணிபுரிந்துள்ளார். அவர் எழுதிய 18 முதமைச்சர்களுடன் என் பரிச்சயம் என்ற புத்தகத்தில் பல ஆர்வமூட்டும் விஷயங்களை வெளியிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ அவார்டு (2002) பெற்ற முதல் தெலுங்கு பத்திரிக்கையாளர் இவர். பிரபலமான தலைவர்களான அம்பேத்கர், நேரு, ராஜீவ் காந்தி ஆகியோரை குடும்பராவு இன்டர்வியூ செய்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்கள், தேசியவாதிகள், பல முக்கிய மனிதர்கள்… இவ்வாறு சுமார் 6000 பேருடைய வாழ்க்கை வரலாறுகளை இவர் எழுதியுள்ளார்.
ஆந்திரப்பிரதேஷிலும், பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் சுமார் 2000 சபைகளில் உரையாற்றியுள்ளார். இதனால் கின்னஸ் புக் ரெக்கார்டு சாதித்தார்.
பிரபல தேசிய தலைவர்களின் உரையாடல்களை தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார். பல நூல்கள் எழுதியுள்ளார்.
1969இல் நேஷனல் பிலிம் அவார்டு கமிட்டியில் அங்கத்தினராக மத்திய அரசு நியமித்தது. நேஷனல் பிலிம் அட்வைசரி கமிட்டியிலும் சென்ட்ரல் ஃபிலிம் சென்சார் போர்டிலும் அங்கத்தினராக பணிபுரிந்தார். சுமார் முப்பது ஆண்டுகாலம் ஏபி ஃப்லிம் ஃபேன்ஸ் அசோசியேஷன் ஜெனரல் செக்ரட்டரியாக பணிபுரிந்தார்.
குடும்பராவு ஒன்றிணைந்த ஆந்திர பிரதேஷ் நூல் நிலைய பரிஷத் சேர்மனாக பணிபுரிந்தார். ஆந்திரா விஸ்வகளாபரிஷத் குடும்பராவுக்கு களாப்ரபூர்ணா அவார்ட் அளித்து கவுரவித்தது. 1989ல் உத்தம எடிட்டர் அவார்டும் 1990இல் தெலுங்கு யுனிவர்சிட்டி உத்தம பயோகிராஃபராகவும், உபன்யாச கேசரி விருதும் பெற்றார்.
ஆந்திரா யுனிவர்சிடியிலிருந்து டாக்டரேட் பட்டம் பெற்றார். 1994ல் உத்தம ஜர்னலிஸ்ட் அவார்டு இவரை வந்தடைந்தது. 1993ல் கின்னஸ் புக் அவார்டும் 1998 இல் அமெரிக்காவிலிருந்து உலக லைஃப்டைம் அசிவ்மெண்ட் அவார்டும் இவரை வரித்தன.