
திருமண மண்டபத்தில் மணப்பெண். வீட்டில் திருடர்கள்.
குண்டூரில் அதிர்ச்சி சம்பவம்!
மகளின் திருமணத்திற்கான பணிகளில் மூழ்கி இருந்த தந்தைக்கு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நேர்ந்தது.
வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்று திரும்பி வருவதற்குள் வீடு கொள்ளை போனது. ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் மறுபுறம் வீட்டில் திருடர்கள் புகுந்து அனைத்தையும் சுருட்டிச் சென்றனர். பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் கால் கிலோ தங்கம் துடைத்துச் சென்று விட்டார்கள். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த தந்தை எல்லாம் கலைத்து போட்ட சாமான்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குண்டூர் மாவட்டம் துர்கியில் உள்ள சாய் தேஜா இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் டைரக்டர் ஆக பணிபுரியும் ‘கூடா சீனிவாசராவ்’ உள்ளூர் பஸ் ஸ்டாண்ட் சென்டரில் வசித்துவருகிறார். தன் மகள் திருமணத்திற்காக பள்ளி வளாகத்திலேயே திருமண மண்டபத்தில் விருந்து ஏற்பாடுகள் செய்தார்.
திருமணத்திற்காக 10 லட்சம் ரூபாய் பணம் 288 கிராம் தங்க நகைகள் ரெடியாக செய்து வீட்டில் பீரோவில் வைத்துப் பூட்டினார். இரவு 10 மணிக்கு பெண்ணின் திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு சென்றார். விடியற்காலை 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்த சீனிவாசராவ் பீரோவில் வைத்திருந்த பணமும் நகையும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் திருட்டு நடந்துள்ளதை கவனித்த அவர் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார். மாச்சர்ல சிஐ, துர்கி எஸ்ஐ சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்கள். ஆதாரங்களை சேகரிப்பதற்காக நிபுணர்களை வரவழைத்தார்கள். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஒருபுறம் பெண்ணுக்கு திருமணம் நடக்கும் நேரத்தில் வீட்டில் இவ்வாறு திருடர்கள் புகுந்து கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.