
பெற்ற மகள்களை பெற்றோரே நரபலி கொடுத்து பூஜை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள சிவநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு, இவரது மனைவி பத்மஜா. புருஷோத்தம் அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவரது மனைவி பத்மஜா ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு அலேக்யா (27) மற்றும் சாயி திவ்யா (22) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இதில் அலேக்யா மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார். சாயி திவ்யா (22). பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு சொந்தமான இசை கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கொரோனா காலம் என்பதால் மகள்கள் இருவரும் கல்லூரிக்கு செல்லாமல் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புருஷோத்தம் மற்றும் அவரது மனைவி பத்மஜா இருவரும் வீட்டில் பூஜைகள் செய்து அற்புதங்கள் நடத்துவதாக கூறி பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு தம்பதியினர் இருவரும் தங்கள் மகள்கள் இருவரையும் நிர்வாணமாக்கி, முதலில் அலேக்கியா, பின்னர் சாய் திவ்யா என இருவரையும் அடித்து கொலை செய்து பூஜை செய்துள்ளனர்.

இந்நிலையில் அலெக்கியா மற்றும் சாய் திவ்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தம்பதியினர் இருவரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
மேலும், தாம்பத்தினர் இருவரும் தங்கள் மகள்களை நிர்வாணப்படுத்தி அடித்து கொலை சேட்டும் காட்சிகள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தநிலையில், அதனை ஆதாரமாக் கொண்டு விசாரித்துவருகின்றனர்.
இதனிடையே, அற்புதங்கள் நிகழும் எனவும், ஒருநாள் இரவு மட்டும் காத்திருங்கள், எங்கள் மகள்கள் மீண்டும் உயிருடன் வருவார்கள் எனவும் தம்பதியினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஆனாலும் அவர்களை கைது செய்த போலீசார் இந்த பூஜைக்கான காரணம் என்ன? மகள்களை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். நல்ல படித்து, நல்ல வேலையில் இருக்கும் தம்பதியினரே தங்கள் மகள்களை அடித்து கொலை செய்து நரபலி கொடுத்து பூஜை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.