vishakapatnam-2
vishakapatnam-2

ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் அருகே உள்ள பிரபல மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சில் 30 பேர் பயணம் செய்தனர். நேற்று இரவு அனந்தகிரி கிராமம் அருகே பஸ் சென்றபோது, ஒரு வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதையில் இருந்து 80 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

bus-acc-1
bus-acc-1

இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்தவர்க்ள இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

vishakapatnam-3
vishakapatnam-3

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.

bus-accedent-1
bus-accedent-1

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஷ் அதிகாரிகள், கலெக்டர், நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைத்துள்ளனர். விபத்துக்குள்ளான பஸ் ஹைதராபாத்தின் தினேஷ் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் ஆகும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending