செராவீக் – மாநாட்டில் பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது!

Published:

modi ceraweek award - 2026

‘செராவீக்’ மாநாட்டில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் செராவீக் எனப்படும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான மாநாடு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. காணொளிக் கரத்தரங்கு வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டில், ‘செராவீக் குளோபல் எனர்ஜி அண்டு என்விராய்ன்மென்ட் லீடர்ஷிப் அவார்ட்’ எனப்படும் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கும் சர்வதேச தலைவருக்கான விருது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் சிறப்பு உரை நிகழ்த்தினார். அப்போது, பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா அடைந்துவிடும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

Related articles

Recent articles

spot_img