முகக்கவசம் அணியாததற்கு அபராதம் போட்ட போலீஸார் மீதுள்ள கோவத்தில் மளிகைக்கடைக்காரர் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
43 வயதான சத்யநாராயண் குப்தா என்ற நபர் ஒருவர் மகாராஷ்டிராவில் உள்ள கம்பல்பாடா பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பொதுமுடக்கத்துக்கு நிகரான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
இதனால் அங்கு மளிகை கடைகள், பால்கடைகள், காய்கறிக்கடைகள் என அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் காலை 7 மணியிலிருந்து காலை 11 மணி வரை மட்டும் திறந்திருக்க அனுமதி வழங்கபட்டுள்ளது.
ஆனால், சத்யநாராயண் குப்தா காலை 11 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்தது மட்டும் இல்லாமல், முகக்கவசமும் அணியாமல் கடைக்கு வெளியில் இரண்டு ஊழியர்களுடன் அமர்ந்திருந்துள்ளார்.
அதை பார்த்த போலீசார் ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேட்டு, மேலும் மூன்று பேருக்கும் சேர்த்து ரூ.1500 அபராதம் விதித்தனர். ஆனால் குப்தா என்னால் அபராதம் கொடுக்க முடியாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்த குப்தா தான் வளர்த்துவந்த இரண்டு நாய்கள் அருகில் நின்று கொண்டிருப்பதை கவனித்து, அதை அபராதம் போட்ட போலீசாரை பழிவாங்க தனது நாய்களை போலீஸார் மீது ஏவிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த இரண்டு நாய்களும் அங்கிருந்த போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பார்த்து குரைத்துள்ளது.
மேலும், அதில் ஒரு நாய் அங்கிருந்த போலீஸ் ஒருவரை கடித்தத்தில் அவர் படுகாயம் அடைந்துள்ளதை அடுத்து, உடனடியாக அவரை மருந்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து, போலீஸார் குப்தாவையும், அவரது ஊழியர் ஆனந்த்தையும் கைது செய்த நிலையில், மற்றொரு ஊழியரான ஆதித்யா தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட குப்தா இதை குறித்து பேசிய போது, அவர் என்ன மாஸ்க் போட சொன்னது கோவம் வந்துருச்சு அதுவும் போடாததுக்கு அபராதம் வேற கேட்டாரு அதான் ரொம்ப கோவம் வந்துருச்சு, என்று கூறினார்.