இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இந்தியில் அனைத்த ஹீரோக்களுடன் நடித்து புகழ்பெற்ற இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர், சமீபத்தில் கூட போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி படாதபாடு பட்டார். பிசியாக நடித்த வந்த இவரின் படங்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார்.
தீபிகாவின் தந்தைக்கு கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. 65 வயதாகும் பிரகாஷ் படுகோனே, முன்னாள் இந்திய பாட்மிண்டன் வீரர் ஆவார். இவர் கொரானா அறிகுறி காரணமாக பரிசோதனை செய்துள்ளார்.
பரிசோதனையில் கொரானா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார்.
ஆனால் காய்ச்சல் குறையாததால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 3 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனது தந்தையை தொடர்ந்து தீபிகா படுகோனேவுக்கும் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.