
உத்தர பிரதேச அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார மையமே பாராட்டியுள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் அமைந்துள்ள புதிய கொரோனா மருத்துவமனையை ராணுவ அமைச்சரான ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உத்தர பிரதேச அரசு வீடு வீடாக கொரோனா பாதித்தோரை கண்டறிந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. எனக் கூறியுள்ளார்.