Hidden humanity
Hidden humanity

ஜலந்தரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தால் கூட பீதியில் மக்கள் மனித நேயமற்று நடக்கும் சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இயல்பான பிரச்சனையால் இருக்கும் நபர்கள் கூட தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறப்பதாக பெரும்பாலான போலி செய்திகளை சமூக வலைதள வாசிகள் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில்11 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக ஜலந்தரில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The latent humanity
The latent humanity

பிறகு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் அவரை அம்ரிஸ்டரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பிறகு சிறுமிக்கு அங்குள்ள அறுவைசிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிறுமியின் உடல் முழுவதும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மூடி இருந்த நிலையில் உறவினர்கள், மக்கள் சிறுமிக்கு தொற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்ததாக எண்ணி பயத்தில் யாரும் இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

இதுவே பிரபலங்கள் சினிமாக்காரர்கள் கொரோனாவில் இறந்தால் கூட விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கூடுகின்ற மக்களுக்கும் குறைவில்லை.

இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மனம் நொந்துபோன தந்தை இறுதியில் தன்னுடைய 11 வயது மகளை தன்னுடைய தோளில் சுமந்தபடியே இடுகாட்டிற்கு வரை தூக்கிச் சென்று தூக்கிச்சென்று தன்னுடைய மக்களுக்கான இறுதிச்சடங்கு செய்துள்ளார்.

இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் பதினொரு வயது சிறுமி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை என காவல் துணை ஆணையர் கன்ஷ்யம் தோரி தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending