bhavan raj
bhavan raj

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.

சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருவது சினிமா துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்த நடிகர் மற்றும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் காலமானார்.

இயக்குநர் பொன்ராமின் இணை இயக்குநரான இவரது மரண செய்தியை அறிவித்த பொன்ராம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

pavan raj
pavan raj

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவுன்ராஜ் மாரடைப்புக் காரணமாக காலமாகி உள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இயக்குநர் பொன்ராமின் இணை இயக்குநரான பவுன்ராஜ், பொன்ராமின் அறிமுக படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், “அங்க தான் பா எங்க அக்கா மவன் முறுக்கு சுட்டு வித்திட்டு இருக்கான்” என சிவகார்த்திகேயன் மற்றும் சூரியிடம் லந்து செய்து கலக்கியிருப்பார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
pawn raj
pawn raj

கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடிக்கு பிறகு செம ஹிட் ஆனது, ரஜினிமுருகன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி தான். டீ கடைக்கு டீ குடிக்க வரும் பவன்ராஜ் வாழைப்பழத்தை பிய்க்க முடியாமல் சிரமப்பட என்ன மதுரைக்காரனுக்கு வந்த சோதனை என கடையையே காலி செய்து விடுவார்.

ponram
ponram

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ” #RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending