
மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்து ஆண் குழந்தை வேண்டும் என பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்ட கணவன் கைது.
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தனது 41 வயது மனைவியை பாலியல் துன்புறுத்தல் மற்றும் மூன்று மகள்களுடன் வீட்டில் அடைத்து வைத்ததாக ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாகபோலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் பாதிக்கப்பட்ட பெண் உதவி கோரி வீட்டின் ஜன்னல் வழியாக துண்டு காகிதத்தை வெளியில் வீசியுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த காகிதத்தில் உள்ளதை படித்த பிறகு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் பண்டார்பூர் நகரத்தின் செண்டே குல்லி பகுதியில் உள்ள வீட்டை போலீசார் திங்கள்கிழமை சோதனையிட்டு அந்தப் பெண்ணையும் அவரது மகள்களையும் மீட்டனர், அதே நேரத்தில் அவரது கணவர் கற்பழிப்பு பிரிவின் கீழ் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கத் தவறியதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலுள்ள ஒரு அறைக்குள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

மேலும் தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பல கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்தார்.