
மதுக்கரையை அடுத்த க.க.சாவடியில், தனியார் மருத்துவ சிகிச்சை மையம் உள்ளது.
இங்கு இரு டாக்டர்கள், காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு, படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிப்பது தெரிய வந்தது.
இது குறித்து, முறையாக அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு தகவலும் தரவில்லை.
இந்நிலையில், இப்பகுதியில் தொற்று பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. இதனையறிந்த, திருமலையம்பாளையம் ஆரம்ப சுகாதார மைய டாக்டர் அழகு ராஜலட்சுமி, எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலர் பத்மலதா மற்றும் வி.ஏ.ஓ., ராஜேஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள், க.க.சாவடி போலீஸ் எஸ்.ஐ., சரவணனுடன் அங்கு சென்று பார்வையிட்டனர். சிகிச்சை அளித்தது உறுதியானதால், வருவாய் துறையினர் கிளினிக்கை மூடி, ‘சீல்’ வைத்தனர்.