
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ரஷ்யாவின் தொற்று நோயியல் மற்றும் நுண் உயிரியலில் காமாலேயா ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதனை அடுத்து புனேவில் உள்ள அட்டாஸ்ஃபர் மையத்தில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இது துவக்க கட்ட அனுமதி என்பதால், 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் உரிமம் நீக்கப்படும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தால் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.