
காஷ்மீரில் புதிதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி, மஜீன் என்ற கிராமத்தில் இந்த கோயிலை கட்டுவதற்காக, 62.06 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 வருஷங்களுக்கு முன்பே குத்தகைக்கு வழங்கியிருக்கிறது.
இந்த இடத்தில்தான், பிரம்மாண்டமான ஏழுமலையான் கோயில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்றுமுன்தினம் நடந்து முடிந்துள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசும்போது, ‘இது ஜம்மு-காஷ்மீருக்கு பெருமைக்குரிய தினமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகவும் அமைந்துள்ளது.
இந்த அற்புதமான தெய்வீக ஆலயப் பணிகள் நிறைவடையும் போது, விஸ்வாசத்தின் மையமாகவும், ஆன்மீகத்தின் இலக்காகவும் இருக்கும். ஆந்திராவைப் போலவே இங்கும் மருத்துவமனை வசதிகளையும் தேவஸ்தானம் அமைக்கவுள்ளது.

இந்திய கலாச்சாரத்தின் அடித்தளத்தை வலிமைப்படுத்த வேத பாடசாலைகள் அமைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி.
கோயில் இங்கு அமைக்கப்படுவதால் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகும். அது நிச்சயம் இந்த மண்டலத்தின் பொருளாதார நிலையை மாற்றும்’ என்றார்.