December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

மனமற்றோரை மணந்ததால் மரித்துப் போன இளம்மலர்கள்! மோகன்லால் ஆதங்க வீடியோ!

kerala - 2025

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையினால் உயிரிழந்ததால் அதிர்ந்து போயிருக்கிறது கேரள மாநிலம்.

கேரள மாநிலத்தின் இந்த வரதட்சணை கொடுமைகள் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக நடிகர் மோகன்லால் பரபரப்பு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

கொல்லத்தை சேர்ந்த 22 வயதான மருத்துவ மாணவி விஸ்மயா நாயர், கடந்த ஆண்டு கிரண்குமாரை திருமணம் செய்துகொண்டார். 100 பவுன் நகைகள், ஒரு ஏக்கர் நிலம், 11லட்சத்தில் கார் கொடுத்தும் மேலும் மேலும் வரதட்சணை கொடுமைப்படுத்தியுள்ளார் கிரண்குமார். கொடுமை தாங்காமல் வீட்டினரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

உடல் முழுவதும் கணவனால் ஏற்பட்ட காயங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பு அழுதிருக்கிறார்.

நேரில் வந்து பேசுகிறோம் என்று சொல்லிவிட்டு பெற்றோர்கள் நேரில் செல்வதற்குள் விஸ்யமா தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்துள்ளது. அது தற்கொலை அல்ல கொலை என்று பெற்றோர் வாதிட்டு வருகின்றனர்.

Screenshot 2021 0627 095324 - 2025

விஸ்யமயாவின் மரணத்தை அடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விஷின்ஜத்தில் அர்ச்சனா என்கிற24 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட செய்தி பரவியது.

அர்ச்சனாவும் சுரேஷும் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், 3 லட்சம் வரதட்சணை கொடுத்த பின்னரும் மேலும் பணம் கேட்டு சுரேஷ் குடும்பத்தினர் நெருக்கடி கொடுக்க, பிரச்சனையாகி அர்ச்சனாவும் சுரேஷும் வீட்டை விட்டு பிரிந்து வாடகை வீட்டுக்கு சென்று வசித்து வந்த நிலையில், ஜூன்21ம் தேதி அன்று இரவு 11.30 மணி அளவில் அர்ச்சனா இறந்துவிட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்திருக்கிறது. டீசல் ஊற்றி மகளை கொன்றுவிட்டதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த ஆண்டும் இதே போல் ஆழப்புழா வல்லிகுன்னத்தில் மார்சி 21ம்தேதி 19வயதான சுசித்ரா என்ற இளம்பெண் கணவரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். வரதட்சணை பிரச்சனையால்தான் இந்த பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

கேரளாவில் வரதட்சணை கொடுமையினால் நடந்த மூன்று இளம்பெண்களின் மரணத்திற்கு நாடெங்கிலும் கண்டனம் எழுந்து வருகிறது.

கேரள இளம்பெண்கள் பலரும், இனிமேல் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மோன்கால் நடித்து வெளிவர இருக்கும் ஆராட்டு படத்தில் இடம்பெற்றிருக்கும் வரதட்சணைக்கு எதிரான காட்சியை வெளியிட்டு, ”வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்”என்று வரதட்சணை கொடுமைக்கு எதிரான முழக்கத்தை தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories