
சந்திரபாபுவுக்கு அதிர்ச்சியளித்த ஜெகன் அரசாங்கம். அந்தப் பெயரை மாற்றி விட்டார்கள். திருப்பதி எம்எல்ஏ பூமண கருணாகர ரெட்டி எடுத்துக் கூறிய விதமாக ஒரு மனதாக ஆமோதித்து தீர்மானம் செய்தார்கள். தீர்மானத்தை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி திருப்பதி கார்ப்பரேஷன் எதிரில் போராட்டம் நடத்தினார்கள். கருட வாரதி என்ற பெயரை மாற்றினார்கள்
ஜெகன் அரசாங்கம் முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது. திருப்பதியில் பெருமையோடு கட்டிவரும் மேம்பாலத்திற்கு கருட வாரதி என்ற பெயரை மாற்றியுள்ளார்கள். புதிதாக ஶ்ரீனிவாச சேது என்று மாற்றி திருப்பதி கார்ப்பரேஷன் கவுன்சிலில் தீர்மானம் எடுத்துள்ளார்கள்.
திருப்பதி எம்எல்ஏ பூமண கருணாகர ரெட்டி எடுத்துக்கூறிய விதமாக ஒருமனதாக ஆமோதித்து தீர்மானம் செய்துள்ளார்கள். இந்த மேம்பாலத்தை அலிபிரி வரை கட்ட வேண்டுமென்ற கருத்து வந்தபோது கூட … இந்த அம்சம் பொறியியல் பிரிவின் பரிசீலனையில் இருக்கிறது என்று தெலுங்கு தேசம் கட்சி கூறியது.

புதிதாக கட்டி வரும் மேம்பாலத்திற்கு இதுவரை எந்த பெயரும் வைக்கவில்லை என்று திருப்பதி எம்எல்ஏ பூமண கருணாகர ரெட்டி கூறினார். தற்போது வழக்கத்தில் உள்ள கருட வாரதி என்ற பெயர் சரியாக இல்லை என்றார். சாட்சாத் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் மீது வாகனங்கள் பயணிப்பது சரியல்ல என்று எண்ணுவதால் ஶ்ரீனிவாச சேது என்று பெயர் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
பெயரை மாற்றியது குறித்து தெலுங்கு தேசம் கட்சி ஆத்திரமடைந்தது. கடந்த அரசாங்கத்தில் பல பெயர்களை பரிசீலித்த பின்னரே கருட வாரதி என்ற பெயரை நாங்கள் தீர்மானித்தோம் என்று கூறி ஸ்ரீநிவாஸ சேதுவாக மாற்றும் தீர்மானத்தை எதிர்த்து திருப்பதி கார்ப்பரேஷன் எதிரில் போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பதியில் ட்ராபிக் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஃப்ளைஓவர் கட்ட ஆரம்பித்தார்கள். 684 கோடி ரூபாய் செலவில் எலிவேடட் காரிடார் கட்டப்பட்டு வருகிறது. 2021 மார்சுக்குள் வேலை முழுமை அடைய வேண்டி இருந்த போதிலும் கொரோனா தாக்கத்தால் கட்டுமானப் பணிகள் தாமதமாயின. மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி உள்ளார்கள்.