மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force) இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய மத்திய காவல் படைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை இராணுவப்படையாகும்.
அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் போன்றவைகளை பாதுகாக்கிறது.
இதன் தலைமை செயலகம் புது தில்லியில் உள்ளது. இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தற்போது CISF படை பிரிவில் Assistant Director (Accounts) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் CISF
பணியின் பெயர் Assistant Director (Accounts)
காலிப்பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தேர்வு செய்யப்படும் முறை Written Exam / Certification Verification / Direct Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2021
கல்வி தகுதி Accounts பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் மத்திய அரசு துறைகளில் பணியாற்றிய நல்ல அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்
சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.67.700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை
விண்ணப்ப கட்டணம் No Fee
சிஐஎஸ்எஃப் உதவி இயக்குநர் ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் https://www.cisf.gov.in ஐ பார்வையிடலாம்.
அறிவிப்பு பலகையை” சரிபார்த்து தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்க்கவும்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை நிரப்பவும்.
குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் ஸ்கேன் நகல்களை இணைக்கவும்.
கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.
அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.cisf.gov.in/cisfeng/