IQOO நிறுவனத்தின் புதிய Z 5 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி.
ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், அதிகபட்சம் 12 GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 3.5 MM ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 64 MB பிரைமரி கேமரா, 8 MB அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 5000 MAH பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
முந்தைய தகவல்களில் IQOO இசட்5 மாடலில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆமோலெட் பேனல் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
IQOO Z5 5G அம்சங்கள்
- 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர்
- அட்ரினோ 642எல் GPU
- 8 GB /12 GB ரேம்
- 128 GB / 256 GB மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம்
- 64 MB பிரைமரி கேமரா
- 8 MB அல்ட்ரா வைடு லென்ஸ்
- 2 MB மேக்ரோ கேமரா
- 16 MB செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 MM. ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5G S.A./ N.S.A., டூயல் 4G வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 MAH. பேட்டரி
- 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
IQOO Z5 5G ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் மற்றும் மிஸ்டிக் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 GB + 128 GB விலை ரூ. 23,990 என்றும் 12 GB + 256 GB விலை ரூ. 26,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் IQOO வலைதளங்களில் அக்டோபர் 3-ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.