யானையை கனவில் வந்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
யானை மீது உட்கார்ந்து வருவது போல கனவு கண்டால் எடுத்த முயற்சி வெற்றி அடையும் என்று பொருள்.
யானை மாலை போடுவது போல கனவு கண்டால் பெரிய பதவி உங்களை தேடி வரும். செல்வாக்கும் உயரும்.
யானை துரத்தி வருவது போல கனவு வந்தால், பழைய விஷயங்களால் மனச்சங்கடங்களும், புதியதாய் பிரச்சனைகளும் உண்டாகும்.
யானை ஆசிர்வாதம் செய்வது போல கனவு கண்டால் நல்லது.
யானை உங்களை துரத்துவது போல கனவு வந்தால் தெய்வ குற்றம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
யானை வீட்டு வாசலில் வந்து நிற்பது போல கனவு வந்தாலும், நாம் யானைக்கு உணவு அளிப்பது போல கனவு வந்தாலும் நன்மைகள் நடக்கும்.