மின்ட் ஜூஸ்
தேவையானவை:
புதினா – ஒரு கட்டு, மீடியம் சைஸ் எலுமிச்சைப் பழம் – ஒன்று,
சர்க்கரை, ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு.
செய்முறை:
புதினா இலை களை சுத்தம் செய்து ஆய்ந்து அலசவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். எலுமிச் சைப் பழத்தை சாறு பிழியவும். இதனுடன் சர்க்கரை, புதினாச் சாறு, தேவையான தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மேலே ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறவும். விருப்பம் இல்லாதவர்கள், ஐஸ் போடாமலும் அருந்தலாம்.