
இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி
முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
இன்றைய போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. இன்று இந்திய அணியில் கே.எல். ராகுல், சஹால், ஷர்துல் தாகூர் ஆடவில்லை. அவர்களுக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், தீபக சாஹார் ஆகியோர் ஆடினர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா (13 ரன் 15 பந்துகள்), ஷிகர் தவான் (26 பந்துகளில் 10 ரன்), விராட் கோலி (இரண்டு பந்துகள், ரன் ஏதும் எடுக்கவில்லை) மூவரும் சரியாக விளையாடவில்லை.
3/42 என்ற நிலையில் ஆட வந்த ரிஷப் பந்த் (54 பந்துகளில் 56 ரன்), ஷ்ரேயாஸ் ஐயருடன் (111 பந்துகளில் 80 ரன்) சேர்ந்து 100 ரன்னுக்கு மேல் எடுத்தார். சூர்ய குமார் யாதவ் இன்று ஜொலிக்கவில்லை.
பின்னர் விளையாட வந்த வாஷிங்டன் சுந்தரும் (34 பந்துகளில் 33 ரன்) தீபக் சாஹாரும் (38 பந்துகளில் 38 ரன்) நன்றாக விளையாடியதால் இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 265 ரன் எடுத்தது.
கடைசிப் பந்தில் முகம்மது சிராஜ் அவுட்டானார். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தப் பொட்டியிலும் 37.1 ஓவர்கள்தான் ஆடினர்.
அதற்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 169 ரன் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.
இன்று தீபக் சஹார் 2 விக்கட், சிராஜ் 3 விக்கட், ப்ரசித் கிருஷ்ணா 3 விக்கட், குல்தீப் யாதவ் 2 விக்கட் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மட்டையாளர்களில் ஒடியன் ஸ்மித்தும் (36 ரன், 18 பந்துகள், 3 ஃபோர், 3 சிக்ஸ்) அல்சாரி ஜோசப்பும் (29 ரன், 56 பந்துகள், 1 ஃபோர், 3 சிக்ஸ்) சிறிது நேரம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பயம் காட்டினர்.
ப்ரசித் கிருஷ்ணா இத்தொடரின் நாயகனாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்திய அணியின் எந்த சிறந்த மட்டையாளரை எடுத்துக்கொண்டாலும் “லெக்” சைடில் போடும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டும் ஷாட்டுகளை அடிப்பர். ஆனால் இன்று லெக் சைடில் போட்ட ஒரு பந்தை விராட் கோலி தட்டி விட அது எளிதாக கீப்பர் கையில் கேட்சாக முடிந்தது.
கோலியின் ஃபுட் வொர்க் சரியில்லை. ரஞ்சி கோப்பையில் விளையாடி கோலி பயிற்சி பெறலாம்.