
இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட், நாக்பூர், மூன்றாம் நாள் 11.02.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்னுக்கு ஆல் அவுட் (லபுசேன் 49, ஸ்மித் 37, ஜதேஜா 5/47, அஷ்வின் 3/42) இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 400 ரன் (ரோஹித் ஷர்மா 120, ரவீந்தர் ஜதேஜா 70, அக்சர் படேல் 84, ஷமி 37, மர்பி 7/124); ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்க்ஸில் 32.3 ஓவரில் 91 ரன்னுக்கு ஆல் அவுட் (ஸ்மித் 25*, லபுசேன் 17. வார்னர் 10, கேரீ 10, அஷ்வின் 5/37, ஷமி 2/13, ஜதேஜா 2/34, அக்சர் படேல் 1/6); இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஒரு இன்னிங்க்ஸ் 132 ரன்களில் வெற்றி பெற்றது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் நடந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம். நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஜதேஜா 66 ரன்களுடனும் அக்சர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநேர முடிவில் இநதிய அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாம் நாள் தொடக்கத்தில் நான்காவது ஓவரில் ஜதேஜா 70 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் அக்சர் படேலும் முகம்மது ஷமியும் இணைந்து திறமையாக விளையாடி, அடுத்த விக்கட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். இருவரும் ஏறத்தாழ 14 ஓவர்கள் விளையாடினர். அதன் பின்னர் முகம்மது சிராஜுடன் இணைந்து அக்சர் படேல் அணியின் ஸ்கோரை 400க்கு உயர்த்தினார். 139.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 400 ரன் எடுத்திருந்தது.
223 ரன் எடுத்தால் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தடுக்கலாம் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அஷ்வின், ஜதேஜா சுழலில் சிக்கி மள மளவென விக்கட்டுகளை இழந்தது. அதில் ஆறு பேர் LBW முறையில் ஆட்டமிழந்தனர்.
ஸ்மித் மட்டும் ஒருபக்கம் ஆட்டமிழக்காமல் நின்று ஆடி 25 ரன் கள் எடுத்தார். இறுதியில் 132 ரன் கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பரிதாபமாகத் தோற்றாது.
ரவீந்தர் ஜதேஜா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். அடுத்த டெஸ்ட் போட்டி டெல்லியில் வருகின்ற 17ஆம் தேதி தொடங்க உள்ளது.