ஐ.பி.எல் 2023 தொடக்கவிழா

Published:

IMG 20230402 170412 - 2026
#image_title
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 202இன் தொடக்கவிழா அகமதாபாத்தில் 31 மார்ச்சு 2023 இல் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.பி.எல் தொடர்களில் வர்ணனையாளராக விளங்கிய மந்திரா பேடி தொடக்க விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

மாலை சரியாக 1800 மணிக்கு விழா தொடங்கியது. பாடகர் ‘அர்ஜித் சிங்’ முதலாவதாக தனது பாடல்களைப் பாடினார். இவர் இந்தித் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான பாடகர். ஷாரூக் கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் “கஷ்மீர் மை, து கன்னியாகுமாரி” என்ற பாடலைப் பாடியவர். தென்னகத்தின் அனைத்து வகையான ஆடல்கள், மயிலாட்டம், களரிபைட், புலியாட்டம் என அனைத்தும் அந்தப் பாடலில் வரும்.


அர்ஜித் சிங் “தேரே பியார் மே”, “ஏக் பார் ஹி கியா”, “து ஜோதி மை மக்கார்” என ஹிட் பாடலகளாக அவர் பாடினார். அகமதபாத் ரசிகர்கள் அவரோடு இணைந்து அனைத்துப் பாடல்களையும் பாடினார்கள். ‘83’ திரைப்படத்தில் இருந்து “இந்தியா ஜீத்தேகா” பாடலை அவர் பாடியபோது மைதானம் முழுவது அந்தப் பாடல் எதிரொலித்தது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!


அவருக்குப் பின்னர் தமிழ் திரைப்பட நடிகை தமன்னா தனது ஆடல் நிகழ்ச்சியை நடத்த வந்தார். முதல் பாடலே “எனிமி” திரைப்படத்தில் இருந்து “மனசோ இப்போ தந்தியடிக்குது… மாமன் நடைக்கு மத்தள டம் டம்… மத்தள டம் டம் மத்தள டம் டம்…” என்ற பாடலைப் பாடி சி.எஸ்.கே ரசிகர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் “ஊம் சொல்றியா மாமா … ஊஹூம் சொல்றியா” பாடலுக்கு அவர் ஆடியபோது அரங்கம் அதிர்ந்தது. “தில் நெ மார் எண்ட்ரி யாரு” பாடலுக்கு அரங்கம் அவரோடு ஆடியது.


இறுதி நிகழ்ச்சியாக ரஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சி. அவர் “ஓ சாமி … என் சாமி வாய்யா சாமி… மன்மத சாமி மந்திர சாமி… போக்கிரி சாமி…” பாடலுக்கு ஆடினார். ரசிகர்கள் ரஷ்மிகா பாடலுக்கு ‘ஒன்ஸ்மோர்’ கேட்ட வண்ணம் இருந்தனர்.


பின்னர் மந்திரா பேடி விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார். ஜெய்ஷா, அருண் டுமால், தலை தோனி, ஹார்திக் பாண்ட்யா ஆகியோர் மேடைக்கு வந்தனர். தோனியும் பாண்ட்யாவும் ஸ்கூட்டர் போல அலங்கரிக்கப் பட்டிருந்த ஒரு தேரில் தனித்தனியாக வந்தனர். பாண்ட்யா சென்ற முறை வென்ற கோப்பையோடு வந்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து


தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர். டாஸ் போடப்பட்டது. டாசில் குஜராத் அணி வென்றது.

Related articles

Recent articles

spot_img