தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு பாரத பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘இந்த விபத்தில் பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காட்டுத்தீ குறித்ஹ தகவல் தெரிந்தவுடன் உடனடியாக மீட்பு பணியை துரிதகதியில் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய விமானப் படையினர், கமாண்டோ வீரர்கள் மற்றும் தமிழக அரசுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நிர்மலா சீதாராமனின் உடனடி நடவடிக்கை தான் வேகமான மீட்புப்பணிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது