
புது தில்லி:
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வழக்குக்கான முகாந்திரம் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்தது.
புதிய தொழில்நுட்பங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன் சகோதரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பைலட் நம்பர்களில் இருந்து சைல்டு நம்பர்கள் எடுக்கப்பட்டதாகவும், சைல்டு நம்பர்களை தொலைபேசி இணைப்பாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாகவும் யாரையும் விடுவிக்கக் கூடாது என்றும் சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது. நீதிபதி உத்தரவின் பேரில் சி.பி.ஐ. தரப்பில் எழுத்து பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்த நீதிபதி நடராஜன், வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.



