இந்தியாவில் 2018ல் 337 மில்லியன் இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருவதாகவும், இது மொத்த இந்திய மக்கள் தொகையில் கால்பகுதியை விட அதிகமாகும் என்றும், உலகில் எந்த நாட்டையும் விட அதிகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நாடாகவும் இந்தியா இருந்து வருவதாக இதுகுறித்து ஆறிவு மேற்கொண்ட இ-மார்கெட்டிர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலைக்கு மொபைல் விற்பனை செய்யப்படுவது, மொபைல் டேட்டா விலை குறைந்தது மற்றும் நகர மயமாக்கல் ஆகியவையே ஸ்மார்ட் போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்று இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.