காவிரி விவகாரத்தில் வஞ்சனை இல்லை; வாஞ்சையுடன் நடக்கிறோம்: தமிழிசை

சற்றுமுன் தமிழகம் மதுரை

tamilisai 2 - 2026

காவிரி விவகாரத்தில் உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ள தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் மீது வாஞ்சையுடன் நடக்கிறோம்; வஞ்சனை இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழக பொதுப் பணித்துறை செயலாளருடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் நேற்று கூட பேசியுள்ளார் என்று குறிப்பிட்ட தமிழிசை, காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வுக்காகவே மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு, நிரந்தரத் தீர்வுக்காக முயற்சித்து வருகிறது என்றுதான் மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. அதனால்தான், நான்கு மாநிலங்களையும் சேர்த்து வைத்து, கூட்டம் நடத்தி, ஒவ்வொருவர் கருத்தையும் கேட்டு, ஒரு நிரந்தர முடிவும் தீர்வும் எடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதனை தெரிவித்துள்ள தமிழிசை, பின்னர் ஏன் உடனடித் தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறினார் என்பது அவருக்கே புரிந்த உண்மை.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.