கர்நாடாகாவில் வரும் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 654 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அவர் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த டெல்லியை மையமாக கொண்ட ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், வேட்பாளர்களில் 883 பேர் கோடிஸ்வரர்கள் என்றும் , 645 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 883 கோடிஸ்வர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 7.54 கோடியாகும். கிரிமினல் வழக்கு கொண்ட 645 வேட்பாளர்களில், 254 பேர் கடுமையான கிரிமினல் வழக்கிலும், 391 கிரிமினல் வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.