பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
பல வருடங்களாக கூட்டணியிலிருந்த பாஜகவும் சிவசேனா கட்சியும், மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன. அந்தத் தேர்தலுக்குப் பின் இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது
இதற்கிடையில், நேற்று ஒரு விழாவில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே “பாஜக தொடர்ந்து அராஜகப் போக்குடன் நடந்து கொள்கிறது. இது நீடித்தால் பாஜக கூட்டணியில் இருந்து விலகவும் தயங்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய சிவசேனாவைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே “அரசு எந்திரத்தை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. மேலும் சிவசேனா தொண்டர்களையும் நசுக்குகிறது. இதையெல்லாம் இனிமேல் நாங்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.




