இன்று மும்பை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் வரவேற்பார்கள் என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டி நீதிமன்றத்தில் நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதற்காகவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதற்காகவும் ராகுல் காந்தி இன்று மும்பை வருகிறார்.
அவரது வருகை குறித்து சஞ்சய் நிரூபம் தெரிவிக்கையில், சாமானிய மக்களின் கருத்துகளுக்கு ராகுல் காந்தி மதிப்பளிப்பவர். சாமானிய மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை நன்கு அறிந்த அவர் அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் தீவிர முயற்சிகளை எடுப்பவர். இதனால்தான் சாமானிய மக்கள் அவரை தங்களில் ஒருவராக கருதுகிறார்கள். இதன் ஒருபகுதியாகத்தான் ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்கள் சகிதம் இன்று மும்பைக்கு வரும் ராகுலை வரவேற்க முடிவு செய்துள்ளனர் என்றார்.



