குஜராத்தில் ராஜினாமா செய்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.,!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
rahul gujcong - 2026

காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார்

குஜராத் காங்கிரசுக்கு மிகப் பெரும் பின்னடைவாக ஒரு எம்,எல்.ஏ., தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் இன்று நடந்திருக்கிறது

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவாக இது கருதப் படுகிறது. சனிக்கிழமை இன்று அக்கட்சியின் பெண் எம்எல்ஏ ஒருவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ஊஞ்சா சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஆஷா பட்டேல் இன்று சட்டப் பேரவை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி இடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்

தனது ராஜினாமாவுக்கு ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸே காரணம் என்று அவர் கூறியுள்ளார்! ஆஷா பட்டேல்தான் கடந்த 2017 டிசம்பர் மாதம் நடைபெற்ற குஜராத் தேர்தலில் ஏழுமுறை எம்எல்ஏவாக இருந்த முன்னாள் அமைச்சர் நாராயண் படேலை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.