Reliance Jio Fiber Broadband Plans - 2026

பிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்… மூன்று சேவைகளையும் ரூ.600-க்குத் தரும் ஜியோ!

ட்ராயின் புதிய மாற்றங்கள்படி பார்த்தால் ஒவ்வொரு மாதமும் கேபிள் டிவிக்கு மட்டுமே 300-500 ரூபாய் ஆகிறது. நல்ல வேகத்துடன் இணையம் வேண்டுமென்றால் அதற்கொரு 1000 ரூபாய். சில நிறுவனங்கள் பிராட்பேண்டுடன் லேண்டுலைனும் இலவசமாகத் தருகிறார்கள். இல்லையென்றால் அதற்கொரு 300 ரூபாய் என மூன்றுக்கும் சேர்ந்து 1,500 வரை ஆகலாம். இவை மூன்றையும் ஒரே கேபிளில் தந்து 600 ரூபாய் மட்டும் வாங்கப் போகிறதாம் ஜியோ.

ஜியோ ஜிகாஃபபர். இந்தச் சேவை இன்னமும் கமர்ஷியலாக சந்தையில் கிடைக்கவில்லை. சில நகரங்களில், சில இடங்களில் மட்டும் சோதனை அடிப்படையில் கிடைக்கிறது. அதுவும் இலவசமாக. வைப்புத்தொகையாக 4,500 ரூபாய் கட்டிவிட்டு இந்தச் சேவையை இலவசமாகப் பலர் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அடுத்த சில மாதங்களில் இந்த காம்போ பேக்கும் கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சந்தைக்கும் வந்துவிடுமெனத் தெரிகிறது.

மாதம் 600 ரூபாய் செலவாகும் இந்தக் காம்போ பேக்கில் 100 MBPS வேகத்தில் 100 ஜி.பி பிராட்பேண்டும், அளவற்ற வாய்ஸ்கால்களும், 600 டிவி சேனல்களும் கிடைக்கும். வீட்டிலிருக்கும் லேப்டாப், மொபைல், கணினி என 40 ஸ்மார்ட் டிவைஸ்கள் வரை இதில் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

மொபைல் சந்தையை மாற்றியெழுதியது ஜியோ. இந்தப் புதிய சேவையும் வந்தால் கேபிள் மற்றும் இணையச் சேவையையும் மாற்றி எழுதும் என நம்பலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending