“VIBGYOR”-(ஸப்த வர்ணங்களும் மிளிரும் வானவில்)
(ஸி.வி.ராமன் போலவே ரஸிக உள்ளமும் விஞ்ஞான அறிவும் ஒன்று கலந்த நம்து சந்திரசேகர இந்திர சரஸ்வதி) (“VIBGYORங்கிறதுல ஆர்டர் தலைகீழா இருந்தாலும் அதே வெள்ளைக்காரா ஸ்கூல் பசங்களுக்கு கிரமப்படி ரெட்ல ஆரம்பிச்சு வயலெட்ஸ் முடியறபடி எப்படி வரிசைப்படுத்திச் சொல்லணுமோ, அது நெனவில் இருக்கிறதுக்காக அந்த ஏழு எழுத்தில் ஆரம்பிக்கிற வார்த்தைகளை ஒரு வாக்கியமா கோத்துச் சொல்லிக்குடுப்பா.அதுலேயே நாஸுக்கா ஒரு புத்திமதியும் குடுத்துடவா-பெரியவா)
கட்டுரையாளர்-ரா,கணபதி

கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரே வெண்மையிலிருந்தே பல வண்ணங்களின் சிதறல் என்று கவிதையில் வருகிறதல்லவா?
இந்த விஞ்ஞான உண்மையில் ஆழ்ந்து ஆராய்ந்து மெய்ஞானத்தோடு பொருந்திப் பல பல சொல்லியிருப்பவர், சந்திரசேகர் வேங்கடராமன் என்ற ஸி.வி.ராமன் போலவே ரஸிக உள்ளமும் விஞ்ஞான அறிவும் ஒன்று கலந்த நம்து சந்திரசேகர இந்திர சரஸ்வதி.
வெள்ளையிலிருந்து வெளிப்படும் ஏழு வண்ணங்களை ஊதா (வயலெட்), கருநீலம் (இன்டிகோ), நீலம் (ப்ளூ), பச்சை(க்ரீன்) ,மஞ்சள்(யெல்லோ) ,இளஞ்சிவப்பு(ஆரஞ்ஜ்), சிவப்பு (ரெட்) என வரிசைப்படுத்தி ஆங்கிலத்திலுள்ள அவ்வார்த்தைகளின் முதலெழுத்துகளை ஒன்று சேர்த்து VIBGYOR என்ற ஸப்த வர்ணங்களும் மிளிரும் வானவில்லைச் சொல்வதுண்டல்லவா? இவ்வாறு வயலெட்டில் தொடங்கி ரெட்டில் முடிப்பது அவ்வளவு சரியல்ல’.
ஏனெனில் இந்த வரிசையை அப்படியே திருப்பி ‘இன்ஃப்ரா ரெட்’ எனப்படும் சிவப்பில்தான் வெள்ளை மற்ற வண்ணாங்களாகப் பிரிய ஆரம்பித்து ,வரிசையாக இளஞ்சிவப்பு,மஞ்சள் எனப் போய் ‘அல்ட்ரா வயலெட்’ எனும் ஊதாவில் முடிகிறது. அதற்கப்புறம் கருப்பு;அந்த முடிவான கறுப்பு,முதலான வெள்ளை இரண்டுமே ஸப்த வர்ணம் என்பதில் சேராதவை என்று ஸ்ரீசரணர் கூறுவார்.
அவர் தப்பு கண்டுபிடிப்பதோடு நிற்பவரல்ல. சரியா எதையும் துல்லியமாகக் கண்டுபிடித்து மெச்சுபவர்,
எனவே தொடர்ந்தார்;
“VIBGYORங்கிறதுல ஆர்டர் தலைகீழா இருந்தாலும் அதே வெள்ளைக்காரா ஸ்கூல் பசங்களுக்கு கிரமப்படி ரெட்ல ஆரம்பிச்சு வயலெட்ஸ் முடியறபடி எப்படி வரிசைப்படுத்திச் சொல்லணுமோ, அது நெனவில் இருக்கிறதுக்காக அந்த ஏழு எழுத்தில் ஆரம்பிக்கிற வார்த்தைகளை ஒரு வாக்கியமா கோத்துச் சொல்லிக்குடுப்பா.அதுலேயே நாஸுக்கா ஒரு புத்திமதியும் குடுத்துடவா.
என்ன வாக்கியம்னா “Read over your good books in vacation’. இதுல வர ஏழு வார்த்தையோட ஆரம்ப எழுத்துக்கள் Vibgyor-க்கு நேர் மாறா, அதாவது ஸயன்ஸுக்கு ஸரியா R,O,Y,G,B,I,V-னுதானே இருக்கு? அதோட லீவ் நாளில் ஒரேடியா வெளையாட்டுலயே எறங்காம நல்ல
புஸ்தகங்கள் படிக்க வேணும்னு புத்திமதியும்?”



