
பிரதமா் மோடியின் சகோதரர் பிரகலாத்மோடி நேற்று ஜெய்புர் செல்லும் வழியில் போலீஸ் நிலையம் முன்பு திடீரென தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத்மோடி நேற்று அஜ்மீரில் இருந்து ஜெய்புருக்கு சாலை வழியாக காரில் சென்றார். அப்போது பாக்ரூ போலீஸ் நிலையம் வந்ததும் அங்கு தனது வாகனத்தை நிறுத்தி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து பேலீஸார் நடத்திய விசாரணையில் தன்னுடன் வரும் தனிப்பாதுகாவலா்களுக்கு தனியாக வாகனம் அளிக்க வேண்டும், தன்னுடன் யாரும் வரக்கூடாது என்று கூறி தா்ணா செய்தார்.
இதையடுத்த ஜெய்ப்புர் போலீஸ் ஆணையர் ஆனந்த்ஸ்ரீவஸ்தவா தொலைபேசியில் பிரகலாத்மோடியிடம் பேச்சு வார்ததை நடத்தியதை தொடர்ந்து சமாதானம் ஏற்பட்டு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
இது குறித்து ஜெய்ப்புர் போலீஸ் ஆணையா் ஆனந்த்ஸ்ரீவஸ்தவா செய்தியாளா்களிடம் கூறியதாவது. பிரதமா் மோடியின் சகோதரர் பிரகலாத்மோடி தன்னுடன் பாதுகாப்புக்காக வரும் போலீஸாருக்கு தனியாக வாகனம் ஏற்பாடு செய்யக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார்
. ஆனால் அவருடன் இரு தனிக் காவலா்கள் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் பிரகலாத்மோடி செல்லும் வாகனத்தில்தான் செல்ல முடியும். அதுதான் விதிமுறை தனியாக வாகனம் ஏற்பாடு செய்து தரமுடியாது என்பதை தெரிவித்தோம்
ஆனால் பாதுகாவலா்களுக்கு தனிவாகனம் அளிக்க கோரினார் இதை நாங்கள் ஏற்கவில்லை விதிமுறைகளின்படி செய்கிறோம் என்றவுடன் அவா் அதை ஏற்றுக்கொண்டார்
இதனையடுத்த பிரகலாத்மோடி சென்ற வாகனத்திலேயே இரு போலீஸாரும் உடன் சென்றனா்.- எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் சகோதரர் திடீரென போலீஸ் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டது ஒருமணிநேரம் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



