இன்று பைரவாஷ்டமி நன் நாளில் காசி கால பைரவரை வழிபட்டார் நரேந்திர மோதி!
17வது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்ற நரேந்திர மோதி, தனக்கு வாக்களித்த வாராணசி மக்களுக்கு நன்றி சொல்வதற்காகவும், வாராணசியில் வழிபாட்டுக்காகவும் வந்திருந்தார்.
காசி விஸ்வநாதர் கோயிலில் பாலபிஷேகம் செய்து காசி விஸ்வநாதரை வழிபட்டார். முன்னதாக, காசி நகரின் காவல் தெய்வம் என்றும், காசி என்ற சக்தி பீட தலத்தின் க்ஷேத்ர பாலராகவும் வணங்கப் படும் காலபைரவர் கோயிலுக்குச் சென்று ஆரத்தி காட்டி வழிபட்டார். பைரவாஷ்டகம் சொல்லி அங்குள்ள பூஜாரிகள் ஆசி வழங்கினர்.
இன்று பைரவருக்கு உகந்த அஷ்டமி நன்னாள் என்பதால், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.




